ஒரு நாளாவது தோனியின் செருப்பாக இருக்கணும்!! தோனியை பெருமைப்படுத்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர்

First Published Jul 17, 2018, 5:14 PM IST
Highlights
david willey wants to be dhoni shoe for a single day


ஒரு நாளாவது தோனியின் ஷூவாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் டேவிட் வில்லி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பல கிரிக்கெட் வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக திகழ்கிறார். தோனியின் கேப்டன்சியின் கீழ் ஆடியவர்கள், அவரது தலைமைப்பண்பையும் நிதானத்தையும் புகழ்வது வழக்கமான ஒன்றுதான். 

பிராவோ, டுபிளெசிஸ், ஷேன் வாட்சன், மைக் ஹஸி போன்ற அனுபவமிக்க சீனியர் மற்றும் முன்னாள் வீரர்கள் கூட தோனியை புகழ்ந்துள்ளனர். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேலே போய்விட்டார் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி.

டேவிட் வில்லி மற்றும் மார்க் உட் ஆகிய இரண்டு இங்கிலாந்து வீரர்களும், ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணியில் ஆடினர். இருவருக்கும் சென்னை அணியில் ஆடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. டேவிட் வில்லி 3 போட்டிகளிலும் மார்க் உட் ஒரு போட்டியில் மட்டுமே ஆடினர். 

இந்நிலையில், தற்போது இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், டேவிட் வில்லி மற்றும் மார்க் உட் ஆகியோருடன் ஹர்பஜன் சிங் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தினார். அப்போது இருவரிடமும், தூங்கி எழும்போது வேறு நபராக விழிக்க விரும்பினால், நீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்கள் என ஹர்பஜன் கேட்டார். 

அதற்கு மார்க் உட், லெனாக்ஸ் லூயிஸ் என்ற பாக்ஸராக விழிக்க விரும்புவதாக கூறினார். 

ஆனால், டேவிட் வில்லியின் பதில் வியப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. தோனியின் ஷூவாக(காலனி) ஒரு நாள் இருக்க வேண்டும் என தோனியை பெருமைப்படுத்தும் விதமாக பதிலளித்தார். மேலும் சென்னை அணியில் ஆடியபோது, தோனியின் நிதானத்தையும் போட்டி குறித்த அவரது சிந்தனையும் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். தோனி பேட்டிங் ஆடுவதை பார்த்தே நிறைய கற்றுக்கொள்ளலாம் என டேவிட் வில்லி புகழ்ந்தார். 
 

click me!