
ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான 46வது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
ஷிகர் தவானுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக ஆடி ரன்களை குவித்தது. இருவரும் அரைசதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி, 122 ரன்களை சேர்த்தது. ஷிகர் தவான் வில்லியம்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் சென்னை அணியின் பவுலர்கள் திணறினர்.
49 பந்துகளுக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில், பிராவோ வீசிய 16வது ஓவரின் கடைசி பந்தில் தவான் அவுட்டானார். இந்த விக்கெட் சென்னை அணிக்கு பிரேக்காக அமைந்தது. ஷர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சனும் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி, 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் வாட்சனும் ராயுடுவும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவுலிங்கில் சிறந்த அணியாக அறியப்பட்ட ஹைதராபாத் அணியின் பவுலிங்கை பறக்கவிட்ட வாட்சனும் ராயுடுவும் அரைசதம் கடந்தனர்.
57 ரன்களில் ஷேன் வாட்சன் ரன் அவுட்டானார். ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராயுடு, சதம் அடித்தார். அம்பாதி ராயுடுவின் அபார ஆட்டத்தால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி சென்னை அணி வெற்றி பெற்றது. 16 புள்ளிகளை பெற்றுள்ள சென்னை அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.