CSK vs MI: CSK Biggest Weakness: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோத உள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ஒரு முக்கியமான பலவீனம் குறித்து பார்க்கலாம்.
CSK vs MI: CSK Biggest Weakness: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று முதல் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆர்சிபி அணி கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல்லில் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் -மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சிஎஸ்கே-மும்பை இந்தியன்ஸ் மோதல்
'தி கிரெடெஸ் ரைவலரி' என அழைக்கப்படும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணிகளுக்குமே இன்று தொடக்க ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். சிஎஸ்கே அணியில் ருத்ராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ஷிவம் துபே என அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளனர். மிடில் வரிசையில் ராகுல் திரிபாதி, ரவீந்திர ஜடேஜே பலம் சேர்கக் இருக்கின்றனர்.
சிஎஸ்கேவின் பலம்
பவுலிங்கை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கம் பிட்ச்க்கு ஏற்ற வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா என தரம்வாயந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். இதேபோல் ரச்சின் ரவீந்திரவும் நன்றாக ஸ்பின் போடுவார். ஆனால் சிஸ்கேவின் மெயின் பிரச்சனையே பாஸ்ட் பவுலிங் யூனிட் தான். சிஎஸ்கேவின் பாஸ்ட் பவுலிங் டிபார்ட்மெண்டில் மதிஷா பதிரனா, கமலேஷ் நாகர்கோட்டி, ஜேமி ஓவர்டன், முகேஷ் சவுத்ரி, சாம் கரண் ஆகியோர் உள்ளனர்.
CSK vs MI Head to Head: அட! சேப்பாக்கத்தில் மும்பை இவ்வளவு மேட்ச் ஜெயிச்சிருக்கா!
சிஎஸ்கேவின் மெயின் பிரச்சனை
இதில் மதிஷா பதிரனாவை தவிர அதிவேகத்தில் பந்துவீசக்கூடிய பவுலர்கள் வேறு யாரும் இல்லை. சிஎஸ்கே முழுக்க முழுக்க பதிரனாவை தான் நம்பி இருக்கிறது. ஆனால் அவர் சமீபகாலமாக இலங்கை அணிக்காக சரியாக செயல்படவில்லை. ஐபிஎல்லில் எந்த அளவுக்கு அவர் சிறப்பாக செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும். பதிரானை தவிர கமலேஷ் நாகர்கோட்டி, முகேஷ் சவுத்ரிக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை.
இங்கு தான் சிக்கல் வரும்
நிறைய வெளிநாட்டு வீரர்கள் சிஎஸ்கேவில் இருப்பாதல் ஜேமி ஓவர்டனுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். சாம் கரணுக்கு பெரிய அளவில் வேகம் இல்லை. சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களுக்கு சாதகமானது என்பதால் அங்கு நடக்கும் போட்டிகளில் ஸ்பின்னர்களை வைத்து ஓட்டி விடலாம். ஆனால் சேப்பாகத்துக்கு வெளியே நடக்கும் பெங்களூரு, கொல்கத்தா, குஜாரத் போன்ற பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் பாஸ்ட் பவுலர்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
மதிஷா பதிரனா மட்டும் போதுமா?
அத்தகைய ஆட்டங்களில் மதிஷா பதிரனா சரியாக பந்து வீசாவிட்டால், பாஸ்ட் பவுலிங் துறையை தூக்கி நிறுத்தும் பெரிய பவுலர்கள் சிஎஸ்கேவில் இல்லை. ஆகவே சிஎஸ்கே இந்த பிரச்சனையை விரைவில் சரிசெய்ய வேண்டியது அவசியமாகும். இதை சரி செய்து விட்டால் சிஎஸ்கே இந்த முறையும் கோப்பையை கையில் ஏந்தி விடலாம்.
இந்த முறை கப் மிஸ்ஸே ஆகாது! கொல்கத்தாவை ஆர்சிபி வீழ்த்தியது எப்படி? இதோ 4 காரணங்கள்!