சிஎஸ்கேன்னா செம மாஸ் !!  பஞ்சாப் அணியை ஓட ஓட விரட்டி கெத்து காட்டிய சென்னை அணி… இப்ப வாங்கடா பாக்கலாம் ?

Asianet News Tamil  
Published : May 21, 2018, 05:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
சிஎஸ்கேன்னா செம மாஸ் !!  பஞ்சாப் அணியை ஓட ஓட விரட்டி கெத்து காட்டிய சென்னை அணி… இப்ப வாங்கடா பாக்கலாம் ?

சுருக்கம்

csk team won the match panjab team in pune by 5 wickets

புனேயில் நடைபெற்ற  கடைசி லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்  சென்னை அணி  வீழ்த்தியது. இதையடுத்து பஞ்சாப் அணி போட்டியியில் இருந்து வெளியேறியது.

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் ரன்ஏதும் எடுக்காமல் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஆரோன் பிஞ்ச்-ஐ 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹர். இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேஎல் ராகுலை 7 ரன்னில் வெளியேற்றினார் லுங்கி நிகிடி.

இதனால் 16 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு மனோஜ் திவாரி உடன், டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மனோஜ் திவாரி 30 பந்தில் 35 ரன்களும், டேவிட் மில்லர் 22 பந்தில் 24 ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்தில் 54 ரன்கள் சேர்க்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் லுங்கி நிகிடி 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அம்பதி ராயுடு, டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். ராயுடு 1 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், மோகித் சர்மா வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். 4-வது ஓவரை அன்கித் ராஜ்பூட் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் டு பிளெசிஸ் ஆட்டமிழந்தார், தொடர்ந்து வந்த சாம் பில்லிங்ஸ் முதல் பந்திலேயே போல்டானார்.

இதனால் சென்னை அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன்பின் ரெய்னா உடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்களில் சென்னை அணி 57 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்பஜன் சிங் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து தீபக் சஹார் களமிறங்கினார்.

15-வது ஓவரை அஷ்வின் வீசினார். அந்த ஓவரின் சஹார் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய சஹார் 20 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடங்கும். அவரைத்தொடர்ந்து கேப்டன் டோனி களமிறங்கினார். 

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஒவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக விளையாடிய ரெய்னா 45 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து பஞ்சாப் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!