நல்ல பேட்ஸ்மேனா இருந்து என்ன பிரயோஜனம்..? புஜாராவுக்கு பேரு கெட்டுப்போச்சு.. ஏமாற்றுக்கார புஜாரானு ஏசும் ரசிகர்கள்

By karthikeyan VFirst Published Jan 28, 2019, 12:45 PM IST
Highlights

279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 23 ரன்களுக்கே விழுந்துவிட்டன. அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ஜாக்சன் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். 

கிரிக்கெட் ஜெண்டில்மேன் விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறே பல வீரர்களாக மிகவும் நேர்மையாக ஜெண்டில்மேனாக இருந்திருக்கின்றனர். அப்படியான ஜெண்டில்மேனாக புஜாரா நடந்துகொள்ளாதது ரசிகர்களிடம் அவர் மீதான மதிப்பை குறைத்துள்ளது. 

ரஞ்சி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதிய ஒரு அரையிறுதி போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற விதர்பா அணி, இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடந்த மற்றொரு அரையிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணி, முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சவுராஷ்டிரா அணி 236 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

39 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கர்நாடக அணி, 239 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸை இழந்தது. இதையடுத்து 279 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியின் முதல் மூன்று விக்கெட்டுகள் 23 ரன்களுக்கே விழுந்துவிட்டன. அதன்பிறகு நான்காவது விக்கெட்டுக்கு புஜாரா - ஜாக்சன் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். இவர்கள் இருவருமே சதமடித்து போட்டியை கர்நாடகாவிடமிருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 

சதமடித்த ஜாக்சன் சரியாக 100 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய புஜாரா, 131 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் சவுராஷ்டிரா அணியை வெற்றி பெற செய்தார். 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள சவுராஷ்டிரா அணி, இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. விதர்பா மற்றும் சவுராஷ்டிரா அணிகள் மோதும் இறுதி போட்டி வரும் பிப்ரவரி 3ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 

இந்த போட்டியில் புஜாரா - ஜாக்சனின் பார்ட்னர்ஷிப் தான் சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக புஜாராவின் நாட் அவுட் இன்னிங்ஸ்தான் காரணம். ஆனால் புஜாரா அரைசதம் அடிப்பதற்கு முன்னதாகவே பெவிலியனுக்கு திரும்பியிருக்க வேண்டியவர்.

வினய் குமார் வீசிய ஒரு பந்து புஜாராவின் பேட்டை உரசி சென்றது. அதை கர்நாடக விக்கெட் கீப்பர் கேட்ச் செய்தார். அது அவுட்டுதான். ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று கூறியதால் வினய் குமார் உள்ளிட்ட கர்நாடக வீரர்கள் அனைவருமே அதிருப்தியடைந்தனர். அதுதொடர்பாக வினய் குமார் அம்பயரிடம் வாக்குவாதமே செய்தார். எனினும் எந்த பலனுமில்லை. புஜாராவையும் பார்த்து இதுகுறித்து கேட்டார் வினய் குமார். ஆனால் வினய் குமாரை புஜாரா கண்டுகொள்ளவேயில்லை. புஜாராவிற்கு அது அவுட்டுதான் என்று தெரியும். அவுட்டுதான் என தெரிந்தும் புஜாரா நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. புஜாராவின் இந்த செயல்பாடு, ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. 

pic.twitter.com/zkG2SH1mjD

— Mushfiqur Fan (@NaaginDance)

புஜாரா மிகச்சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அந்த நேரத்தில் அவர் நேர்மையாக, ஜெண்டில்மேனாக நடந்திருக்கலாம். ஆனால் அவுட் என தெரிந்தும் களத்தில் தொடர்ந்து ஆடியது ரசிகர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளதோடு அவர் மீதான மதிப்பையும் குறைத்துள்ளது. ரசிகர்கள் சிலர் டுவிட்டரில் அவரை ஏமாற்றுக்காரர் என ஏசிவருகின்றனர். 
 

click me!