நியூசிலாந்து பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்த சாஹல்!!

By karthikeyan VFirst Published Jan 28, 2019, 10:49 AM IST
Highlights

59 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், டெய்லரும் டாம் லதாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடியதுடன் ரன்களையும் சேர்த்தனர். 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் கப்டிலும் முன்ரோவும் இந்த போட்டியிலும் வழக்கம்போலவே வந்ததும் நடையை கட்டினர். ஷமி வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து 7 ரன்களில் வெளியேறினார் முன்ரோ.

இதையடுத்து புவனேஷ்வர் குமார் வீசிய 7வது ஓவரின் முதல் பந்தில் 13 ரன்களில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கப்டில். இதையடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனுடன் அனுபவ ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இவர்களும் பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிவிட்டனர். 

இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க நினைத்து நிதானமாக ஆடிவந்த நிலையில், வில்லியம்சனை வீழ்த்தினார் சாஹல். சாஹல் வீசிய பந்தை வில்லியம்சன் டிரைவ் ஆட, மிட் விக்கெட் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா, அபாரமாக டைவ் அடித்து அந்த கேட்ச்சை பிடித்தார். அதனால் வில்லியம்சன் 48 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

59 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், டெய்லரும் டாம் லதாமும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடியதுடன் ரன்களையும் சேர்த்தனர். சாஹல், குல்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கை தெளிவாக ஆடி, இருவரும் அரைசதம் கடந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்களை சேர்த்த நிலையில், லதாம் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே அவரை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்து பிரேக் கொடுத்தார் சாஹல். சாஹலின் பந்தில் 51 ரன்களில் லதாம் ஆட்டமிழந்தார். 

இந்த பார்ட்னர்ஷிப் 38வது ஓவரில் உடைக்கப்பட்டது. அதன்பிறகு டெய்லருடன் ஜோடி சேர்ந்த நிகோல்ஸை, அருமையான ஸ்லோ பவுன்ஸரில் 40வது ஓவரின் மூன்றாவது பந்தில் வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. இதையடுத்து டெய்லருடன் சாண்ட்னெர் ஜோடி சேர்ந்துள்ளார். 43 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. எஞ்சிய 7 ஓவர்களில் அதிகபட்சமாக 70 - 80 ரன்கள் எடுக்க வாய்ப்புள்ளது. எனவே இந்திய அணிக்கு மிகக்கடினமில்லாத எட்டக்கூடிய இலக்கைத்தான் நியூசிலாந்து நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. 
 

click me!