தோனியை தவிர வேறு யாரும் கிடையாது!! அஃப்ரிடி அதிரடி

Asianet News Tamil  
Published : May 12, 2018, 10:40 AM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
தோனியை தவிர வேறு யாரும் கிடையாது!! அஃப்ரிடி அதிரடி

சுருக்கம்

coolest captain in world cricket is dhoni said shahid afridi

உலகிலேயே கூலான கிரிக்கெட் கேப்டன் தோனி தான் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான சூழல்களில் பதற்றமோ கோபமோ படாமல், வீரர்களை ஊக்கப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தும் தோனி, கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். களத்தில் தோனியின் அணுகுமுறையையும் அவரது கூலான நடவடிக்கைகளையும் இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல் பல வெளிநாட்டு வீரர்களும் புகழ்ந்துள்ளனர்.

இந்தியாவிற்கு மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் பெற்றுத்தந்த பெருமைக்குரியவர் தோனி. கூல் கேப்டன் என்றால் தோனியைத் தவிர வேறு பெயர் யாருக்குமே நினைவுக்கு வராது. 

அந்தவகையில், அஃப்ரிடியும் கூலான கேப்டன் யார் என்ற கேள்விக்கு சிறிதும் யோசிக்காமல் சட்டென தோனி என பதிலளித்துள்ளார். கனடாவின் டொரண்டோ நகரில் தனது கிரிக்கெட் கிளப்பை தொடங்கிய அஃப்ரிடி, ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வகையிலான கேள்விகளை எதிர்கொண்டார்.

அப்போது, உலகிலேயே கூலான கேப்டன் யார் என்ற கேள்விக்கு தோனி என்றும், அவருக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு கோலி என்றும் பதிலளித்தார்.

மேலும், பாகிஸ்தானுக்கு வெற்றி பெற 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு முனையில் நீங்கள் இருக்கிறீர்கள்; எதிர்முனையில் யார் ஆட வேண்டும் என்று விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு ”அப்துல் ரஸாக்” என்று பதிலளித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?