காமன்வெல்த்: இந்திய பாக்ஸர்கள் அமித் பங்கல், நீத்து தங்கம் வென்றனர்..! வெள்ளியை உறுதி செய்த பி.வி.சிந்து

Published : Aug 07, 2022, 04:35 PM ISTUpdated : Aug 07, 2022, 04:59 PM IST
காமன்வெல்த்: இந்திய பாக்ஸர்கள் அமித் பங்கல், நீத்து தங்கம் வென்றனர்..! வெள்ளியை உறுதி செய்த பி.வி.சிந்து

சுருக்கம்

காமன்வெல்த் பாக்ஸிங்கில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளது. இந்திய பாக்ஸிங் வீரர் அமித் பங்கல் மற்றும் பாக்ஸிங் வீராங்கனை நீத்து ஆகிய இருவரும் தங்கம் வென்றனர்.   

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கடைசி நாளிலும் இந்தியா பதக்கங்களை குவித்துவருகிறது.

ஆடவர் 48-51 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இங்கிலாந்தின் மெக்டொனால்டை எதிர்கொண்டு ஆடிய இந்தியாவின் அமித் பங்கால், 5-0 என்ற கணக்கில் மெக்டொனால்டை வீழ்த்தி தங்க பதக்கம்  வென்றார்.

அதேபோல மகளிர் 45-48 கிலோ எடைப்பிரிவு பாக்ஸிங்கில் இங்கிலாந்தின் ரெண்டர் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட இந்தியாவின் நீத்து, அவரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். பாக்ஸிங்கில் இன்று மட்டும் இந்தியாவிற்கு 2 தங்க பதக்கங்கள் கிடைத்தது. 

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி.சிந்து ஃபைனலுக்கு முன்னேறி வெள்ளியை உறுதி செய்தார்.

பேட்மிண்டன் அரையிறுதியில் சிங்கப்பூரின் ஜியா மின் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட பி.வி.சிந்து அபாரமாக விளையாடி 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறினார். ஃபைனலுக்கு முன்னேறியதன் மூலம் சில்வர் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். ஃபைனலில் ஜெயித்தால் தங்கம் வெல்லலாம்.
 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!