இந்தியாவின் 75வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ்..! நாட்டிற்கு பெருமை சேர்த்த 16 வயது தமிழக வீரர்

By karthikeyan VFirst Published Aug 7, 2022, 2:30 PM IST
Highlights

செஸ் விளையாட்டில் இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ். 
 

கிரிக்கெட், கால்பந்து அணிகளுக்கும், வீரர்களுக்கும் உலக கோப்பை எப்படி பெருங்கனவோ, செஸ் வீரர்களுக்கு அப்படித்தான் கிராண்ட்மாஸ்டர் பட்டமும். செஸ் விளையாடும் ஒவ்வொரு வீரரும் கிராண்ட்மாஸ்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் தான் பயணிப்பார்கள்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

அன்தவகையில், 2500  புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவிலிருந்து ஏற்கனவே 74 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்தநிலையில், 75வது கிராண்ட்மாஸ்டராக  பிரணவ் வெங்கடேஷ் உயர்ந்திருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரரான பிரணவ் வெங்கடேஷ், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டராக உருவானார். தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டரான 27வது செஸ் வீரர் பிரணவ் ஆவார். இதற்கு 26 தமிழக வீரர்கள் கிராண்ட்மாஸ்டர்களாக இருந்தனர். அவர்களுடன் பிரணவும் இணைந்துள்ளார்.
 

click me!