
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது. நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றனர். குறிப்பாக பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 4 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
தங்கம் - மீராபாய் சானு
பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாட்ச் சுற்றில் 88 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 113 கிலோ எடை என மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மீராபாய் சானு.
இதையும் படிங்க - CWG 2022: அறிமுக போட்டியிலேயே அபார வெற்றி..! 14 வயதில் இத்தனை சாதனைகளா..? யார் இந்த அனஹாத் சிங்..?
வெள்ளி - சங்கேத் சர்கார், பிந்த்யாராணி தேவி
பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார், ஸ்னாட்ச்சில் 113 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 135 கிலோ என மொத்தம் 248 கிலோ எடையை தூக்கிய சங்கேத் சர்கார், மலேசியாவின் பிப் அனிக்கை விட ஒரு கிலோ குறைவாக தூக்கியதால் தங்கத்தை தவறவிட்டு வெள்ளி பதக்கம் வென்றார்.
பளுதூக்குதல் மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தமாக 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் பிந்த்யாராணி தேவி.
இதையும் படிங்க - WI vs IND: அந்த பையன் எங்கே.? என்னடா டீம் செலக்ஷன் இது.? அதிரடி வீரரின் புறக்கணிப்பு.. ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு
வெண்கலம் - குருராஜா
பளுதூக்குதல் 61 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட குருராஜா, ஸ்னாட்ச்சில் 118 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 151 கிலோ எடையை தூக்கினார். மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கிய குருராஜா வெண்கலம் வென்றார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.