எப்போ என்னை கூப்புடுவாங்கனு போனை ஆன்லயே வச்சுருக்கேன்!! தென்னாப்பிரிக்க அணிக்கு திரும்ப ஆசைப்படும் வீரர்

By karthikeyan VFirst Published Feb 26, 2019, 4:53 PM IST
Highlights

உலகளவில் பல்வேறு டி20 தொடர்களில் ஆடிவந்தாலும், சொந்த நாட்டு அணிக்காக ஆடமுடியாத வேதனை அவருக்கு உள்ளது. 

தென்னாப்பிரிக்க வீரர் கோலின் இங்கிராம் மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக ஆட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். 

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் அறிமுகமான கோலின் இங்கிராம் 2013ம் ஆண்டு வரை 31 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடினார். அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணியில் எடுக்கப்படவில்லை. 

தென்னாப்பிரிக்க அணியில் ஆடாவிட்டாலும் ஐபிஎல் உட்பட உலகளவில் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். இந்த ஐபிஎல்லில் கூட டெல்லி கேபிடள்ஸ் அணி, இங்கிராமை ரூ.6.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

உலகளவில் பல்வேறு டி20 தொடர்களில் ஆடிவந்தாலும், சொந்த நாட்டு அணிக்காக ஆடமுடியாத வேதனை இங்கிராமிற்கு இருந்துகொண்டே இருக்கிறது. 2013ம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகளாக ஒருநாள் அணியில் இங்கிராம் இடம்பெறவில்லை. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய இங்கிராம், தென்னாப்பிரிக்க அணியில் இடம் கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்தான். ஆனால் மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், எப்போது வேண்டுமானாலும் தேர்வாளர்கள் போன் செய்வார்கள் என்ற நம்பிக்கையில், போனை எப்போதுமே ஆன் செய்தே வைத்துள்ளேன். ஆனால் இதுவரை போன் வரவில்லை என வருத்தத்தை பதிவு செய்துள்ளார். 
 

click me!