ராட்வன்ஸ்காவுக்கு 20; முர்ரேவுக்கு 40…

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 01:48 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ராட்வன்ஸ்காவுக்கு 20; முர்ரேவுக்கு 40…

சுருக்கம்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா 20-வது முறையாகவும், ஆன்டி முர்ரே 40-வது முறையாகவும் பட்டம் வெல்கின்றனர்.

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஞாயிற்றுக் கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் அக்னீஸ்கா ராட்வன்ஸ்காவும் (போலந்து), ஜோஹன்னா கோன்டாவும் (இங்கிலாந்து) மோதினர். அபாரமாக ஆடிய அனுபவம் வாய்ந்த ராட்வன்ஸ்கா 6–4, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை தனதாக்கினார்.

தரவரிசையில் 3–வது இடம் வகிப்பவரான ராட்வன்ஸ்கா சீன ஓபன் பட்டத்தை வெல்வது 2–வது முறையாகும். ஏற்கனவே 2011–ம் ஆண்டிலும் இங்கு வாகை சூடியிருக்கிறார். மொத்தத்தில் இது அவரது 20–வது பட்டமாகும்.

இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே 6–4, 7–6 (2) என்ற நேர் செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை (பல்கோரியா) தோற்கடித்து கோப்பையை வென்றார். இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்காத முர்ரேவுக்கு இது 40–வது சர்வதேச மகுடம் ஆகும்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IPL 2026-க்கு பிறகு குட்பை சொல்லும் 5 ஸ்டார் வீரர்கள்! அட! மிஸ்டரி ஸ்பின்னரும் இருக்காரா?
வீட்டுக்கு போய் விசில் அடிங்க"... சேப்பாக்கத்தில் CSK ரசிகர்களை வம்பிழுத்த இஷான் கிஷன்! வீடியோ வைரல்