செஸ் ஒலிம்பியாட்:2வது சுற்றில் தமிழக வீரர்கள் அபார வெற்றி! பிரக்ஞானந்தா, அதிபன், கார்த்திகேயன், நந்திதா வெற்றி

By karthikeyan VFirst Published Jul 30, 2022, 7:04 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2வது சுற்றிலும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். 
 

மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். 2வது சுற்றில் இந்திய ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர். 

பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து ஆடிய எஸ்டானியா வீரர் சுகாவின் கிரில்லை 41வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.  ஆடவர் சி பிரிவில் இடம்பெற்று ஆடிய கார்த்திகேயன் முரளியும் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன், கார்த்திகேயன் முரளி ஆகிய மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

மகளிர் சி அணியில் இடம்பெற்று ஆடிய சேலத்தை சேர்ந்த நந்திதா 34வது நகர்த்தலில் சிங்கப்பூர் வீராங்கனை என் இம்மானுவேலுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடேவும் வெற்றி பெற்றார். நந்திதாவும் தமிழகத்தை சேர்ந்தவர். 

பொதுப்பிரிவில் இந்தியா ஆடவர் ஏ அணி மால்டோவா அணியை வீழ்த்தியும், இந்தியா மகளிர் சி அணி சிங்கப்பூர் அணியை வீழ்த்தியும் வெற்றி பெற்றன. இந்தியா ஆடவர் பி மற்றும் மகளிர் பி அணிகளும் எதிரணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றன. 
 

click me!