
சென்னையில் நடைபெற்ற இந்திய பெருந்துறைமுகங்கள் இடையிலான செஸ் போட்டியில் சென்னை துறைமுக அணியும், கேரம் போட்டியில் மும்பை அணியும் சாம்பியன் வென்று அசத்தின.
சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்திய பெருந்துறைமுகங்கள் இடையிலான செஸ் மற்றும் கேரம் போட்டியை கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் முதல் இண்டர்நேஷனல் மாஸ்டரான மானுவேல் ஆரோன் தொடங்கி வைத்தார்.
மூன்று நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை, கோவா, மங்களூர், விசாகப்பட்டினம், சென்னை, எண்ணூர் காமராஜர் உள்ளிட்ட ப்ன்பது துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 115 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் செஸ் போட்டியில் சென்னை அணியும், கேரம் போட்டியில் மும்பை அணியும் ஒட்டுமொத்தச் சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.
சனிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை காமராஜர் துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வழங்கி சிறப்பித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.