
பெலாரஸூக்கு எதிரான மூன்றாவது வலைகோற்பந்து (ஹாக்கி) ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தொடர்ச்சியாக 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது இந்திய மகளிரணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நேற்று நடைபெற்ற பெலாரஸூக்கு எதிரான மூன்றாவது வலைகோற்பந்து ஆட்டத்தின் முதல் கால் ஆட்டம் கோலின்றி முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது கால் ஆட்டத்தின் 24-ஆவது நிமிடத்தில் பெலாரஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் ரிட்டா பதுரா கோலடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெலாரஸ் அணி 1-0 என முன்னிலைப் பெற்றது.
பின்னர் நடைபெற்ற 3-ஆவது கால் ஆட்டத்தில் இந்திய கேப்டன் ராணி 35 மற்றும் 39-ஆவது நிமிடங்களில் கோலடிக்க, 42-ஆவது நிமிடத்தில் தீபிகா கோலடித்தார். இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
உலக ஹாக்கி லீக்கின் 2-ஆவது சுற்று வரும் ஏப்ரலில் கனடாவில் நடைபெறவுள்ளது. அதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி இந்தப் போட்டியில் விளையாடி வருகிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.