
ஐபிஎல் சீசன் 11 ல்மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சென்னை திரும்பிய சிஎஸ்கே அணியினரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். தோனி உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து, அவர்கனை ரசிகள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 178 ரன்களை எடுத்தது. சென்னை தரப்பில் கிடி, தாகுர், சர்மா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களை எடுத்து சென்னை வெற்றி பெற்றது. 8 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 117 ரன்களை குவித்து வாட்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றியோ தோல்வியோ விளையாட்டு வீர்கள் அனைவரும் நாளை சென்னை சென்று வெற்றிக் கோப்பையை ரசிகர்களுக்கு சமர்ப்பணம் செய்வேர்ம், இங்களை உற்சாகப்படத்தி, செற்றி பெற வைத்த ரசிகர்களை சந்திபோபம் என தோனி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இமாலய வெற்றி பெற்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் நேற்று மாலை சென்னை வந்தனர்.
அவர்கள் மும்பையில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்திறங்கினார்கள். அங்கு, சிஎஸ்கே வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். தோனி மற்றும் சிஎஸ்கே வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தோனி உள்ளிட்ட வீரர்களை ஆட்டம், பாட்டத்துடன் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்
பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய விமான நிலையத்துக்கு வீரர்கள் அழைத்து வரப்பட்டார்கள். பிறகு, அங்கிருந்து நட்சத்திர விடுதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.