
18 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கால்பந்தாட்டப் போட்டியில் சென்னை இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை அணி (ஐசிஎஃப்) வாகை சூடி அசத்தியது.
மதுரையில், தொன்போஸ்கோ இளையோர் இயக்கம் சார்பில் 18-ஆவது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி மே 23-ஆம் தேதி தொடங்கியது.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்றன.
சென்னை இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎஃப்) அணியும், மதுரை சேது கால்பந்தாட்ட அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்று தொன்போஸ்கோ ஐடிஐ மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியும் நடைப்பெற்றது/.
இதன் ஆட்ட நேர முடிவில் சென்னை ஐசிஎஃப் சார்பில் டேவிட், மதுரை சேது சார்பில் லெனின் கோல் அடித்து சமநிலையில் இருந்தன.
இதையடுத்து டை பிரேக்கர் முறையில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடைபெற்ற இதில் இரு அணிகளும் தலா 5 கோல் அடித்து மீண்டும் சமநிலையை அடைந்தன.
பின்னர், சடன் டெத் முறைப்படி இறுதித் தேர்வு நடைபெற்றது. பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடைபெற்ற இதில் 7-6 என்ற கோல் கணக்கில் சென்னை ரயில் இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) அணி வெற்றி பெற்றது.
போட்டியில் முதலிடம் பெற்ற சென்னை இரயில் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை அணிக்கு (ஐசிஎஃப்) ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், சி.ஆர்.ஆனந்த் நினைவு சுழற்கோப்பையும் மதுரை சி.ஆர். பொறியியல் கல்லூரி தாளாளர் சின்னத்துரை வழங்கினார்.
இரண்டாவது இடம் பெற்ற மதுரை சேது கால்பந்தாட்ட அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இவர்களுக்கு சம்சுனீஷ்சா நினைவு சுழற்கோப்பையை சேது பொறியியல் கல்லூரி தலைமை நிர்வாக அலுவலர் சீனிமொய்தீன் வழங்கினார்.
மூன்றாவது இடம் பெற்ற சென்னை மாநகர காவல் அணிக்கு மதுரை நிப்பான் பர்னிச்சர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் தனுஷ்கோடி ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கினார்.
நான்காவது இடம் பெற்ற தமிழ்நாடு காவல் அணிக்கு (சென்னை) மதுரை கால்பந்தாட்டக் கழகப் பொருளாளர் சுரேஷ் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.