Mohammed Shami: கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி! முழு உடற்தகுதி பெறவில்லையா?

Published : Feb 23, 2025, 04:47 PM IST
Mohammed Shami: கால் வலியால் அவதிப்பட்ட முகமது ஷமி! முழு உடற்தகுதி பெறவில்லையா?

சுருக்கம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் முகமது ஷமி கால் வலியால் அவதிப்பட்டார். இதனால் அவர் முழு உடற்தகுதி பெறவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. துபாயில் நடந்து வரும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இப்போது வரை பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 80 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஸ்டார் வீரர் பாபர் அசாம் (23) ஹர்திக் பாண்ட்யா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இமாம் உல் ஹக் (5) அக்சர் படேலின் சூப்பர் த்ரோவில் ரன் அவுட் ஆனார். அவர் தேவையின்றி ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை இழந்தார்.

இந்த போட்டியின்போது பவுலிங் செய்து கொண்டிருந்த முகமது ஷமிக்கு திடீரென கணுக்காலில் ஏற்பட்ட வலி ஏற்பட்டது. களததுக்கு வந்த பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்தார். பின்பு ஷமி களத்தில் இருந்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஹர்திக் பாண்ட்யா பவுலிங் செய்தார். சிறிது நேரம் பெவிலியனில் இருந்து களம் புகுந்த முகம்து ஷமி மீண்டும் பவுலிங் செய்தார்.

காயம் காரணமாக சுமார் ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடாத முகமது ஷமி, இங்கிலாந்து ஓடிஐ தொடரில் தான் அணிக்கு திரும்பினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தொடக்கத்தில் இருந்தே முகம்து ஷமியின் பந்துவீச்சு சரியாக அமையவில்லை. முதல் ஓவரில் 5 வைடுகளை வீசிய அவர் 130 கிமீ வேகத்துக்கு மேல் பந்துவீச சிரமப்பட்டார்.

கணுக்கால் வலி காரணமாக அவரால் வேகமாக பந்து வீச முடியவில்லை. இதனால் முகமது ஷமி முழு உடற்தகுதி பெறவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் அவர் மீண்டும் கால் வலியால் அவதிப்படுவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?
IND vs SA: வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி, பாபர் அசாம் சாதனை சமன் செய்யப்படுமா?