
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா இந்திய அணிக்கு தலைமை வகிக்க இருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மீண்டும் இடம்பெறவில்லை.
முதல் முறையாக ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒருநாள் போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் கோலிக்கு பதிலாக மூன்றாவது வீரராக களம் காண வாய்ப்புகள் அதிகம். அத்துடன்,
மிதவேகப்பந்துவீச்சாளர் சித்தார்த் கெளலும் அவருடன் புதிதாக இணைந்துள்ளார். சித்தார்த் 50 முதல் தர கிரிக்கெட்டுகளில் 175 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல் அணிக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் தவிர, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட வழக்கமான வீரர்கள் அணியில் உள்ளனர்.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், அந்தப் போட்டிக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான டி-20 அணியும், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணியும் அறிவிக்கப்படும்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், அஜிங்க்ய ரஹானே, ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.