பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: முன்னணி வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா...

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 12:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: முன்னணி வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா...

சுருக்கம்

Brisbane International Tennis Ukraine player advanced to next level

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா.

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான ஸ்விடோலினாவும், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார் ஸ்விடோலினா. இதன்மூலம், 4 முயற்சிகளில் முதல் முறையாக பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்விடோலினா முன்னேறியுள்ளார்.

இறுதிச்சுற்றில் அவர் பெலாரஸின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொள்ள இருக்கிறார்.

முன்னதாக சாஸ்னோவிச், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை 7-6(3), 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சென்னை பையன் டூ இங்கிலாந்து கேப்டன்.. மெட்ராஸின் பழைய நினைவுகளில் மூழ்கிய நாசர் ஹுசைன்.. நெகிழ்ச்சி!
ரிங்கு சிங்கின் தந்தை மரணம்.. சிலிண்டர் சுமந்தே மகனை சிகரம் தொட வைத்த நிஜ ஹீரோ.. ரசிகர்கள் ஷாக்!