தகுதிச்சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் பாம்ப்ரி வெற்றி…

First Published Jan 12, 2017, 12:40 PM IST
Highlights

ஆஸ்திரேலிய ஓபன் தகுதிச்சுற்றின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெற்றி அடைந்தார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

இந்த நிலையில் அதற்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின.
அதில் யூகி பாம்ப்ரி தனது முதல் சுற்றில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் ஸ்டீபன் கோஷ்லோவெனை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் பாம்பரி 20 நெட் புள்ளிகளைப் பெற்றார். ஸ்டீபனிடம் தனது சர்வீஸை இரு முறை இழந்த பாம்ப்ரி, ஸ்டீபனின் சர்வீஸை 6 முறை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்துப் பேசிய பாம்ப்ரி, "இது எனக்கு நல்ல தொடக்கம். முதல் சுற்று மிகக் கடினமாக இருந்தது. எனினும் உறுதிமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லா ஆட்டமும் கடினமானவைதான். எனவே 2-ஆவது சுற்றிலும் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்' என்றார்.

சர்வதேச தரவரிசையில் 381-ஆவது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி, முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சீசனில் பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் ஓய்வில் இருந்தார். ஆனால் இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

பாம்ப்ரி தனது 2-ஆவது சுற்றில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டியானை சந்திக்கிறார்.

யூகி பாம்ப்ரி, அடுத்த இரு சுற்றுகளிலும் வெல்லும்பட்சத்தில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்றுவிடுவார்.

tags
click me!