பாம்ப்ரிக்கு இரண்டாவது சுற்றிலும் வெற்றி…

First Published Jan 13, 2017, 12:07 PM IST
Highlights

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி இரம்ண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளார். 3-ஆவது சுற்று ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்று விடுவார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும் திங்கள்கிழமை மெல்போர்னில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவின் யூகி பாம்பரி தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை தோற்கடித்தார்.

2009-இல் ஜூனியர் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான யூகி பாம்ப்ரி, தனது 3-ஆவது தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் எர்னெஸ்டோ எஸ்கோபீடோவை சந்திக்கிறார்.

3-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறித்து யூகி பாம்ப்ரி, “இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினேன். எனக்கு கிடைத்திருக்கும் மற்றொரு நல்ல வெற்றி இது. மிகச்சிறப்பாக சர்வீஸ் அடித்ததோடு, முக்கியமான நேரத்தில் பெட்ஜாவின் சர்வீஸை முறியடித்தேன். அதுதான் எனக்கு வெற்றி தேடித்தந்தது. 3-ஆவது சுற்று ஆட்டம் எனக்கு மிகுந்த சவாலாக இருக்கும். ஆட்டம் எப்படி போகிறது என்று பார்க்கலாம்” என்று கூறினார்.

tags
click me!