ஆறாவது முறையாக இறுதிச்சுற்றிக்கு முன்னேறியுள்ளார் சானியா…

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 12:05 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
ஆறாவது முறையாக இறுதிச்சுற்றிக்கு முன்னேறியுள்ளார் சானியா…

சுருக்கம்

கடந்த ஆகஸ்டில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸிடம் இருந்து பிரிந்த பிறகு விளையாடி வரும் சானியா, 6-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்..

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சானியா - பர்போரா ஜோடி தங்களின் அரையிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் வானியா கிங் - கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடியைத் தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் சானியா - பர்போரா ஜோடி, நான்கு முறை எதிர் ஜோடியின் சர்வீஸை முறியடித்தது.

இதன்மூலம் இந்தியாவின் சானியா மிர்ஸா - செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

சானியா - பர்போரா ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் ஹங்கேரியின் டிமியா பபாஸ் - ரஷியாவின் அனாஸ்டாஸியா ஜோடியைச் சந்திக்கிறது.

கடந்த ஆகஸ்டில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸிடம் இருந்து பிரிந்த பிறகு 8-ஆவது தொடரில் விளையாடி வரும் சானியா, 6-ஆவது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பர்போராவுடன் இணைந்து சின்சினாட்டி, டோக்கியோ போட்டிகளிலும், மோனிகா நிகுலெஸ்குவுடன் இணைந்து நியூ ஹெவன் போட்டியிலும் சானியா சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!