ஐபிஎல் கோபத்தில் பாகிஸ்தான் வீரரின் கையை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!!

Asianet News Tamil  
Published : May 26, 2018, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஐபிஎல் கோபத்தில் பாகிஸ்தான் வீரரின் கையை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!!

சுருக்கம்

ben stokes broken arm of babar azam

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், தொடரை விட்டே வெளியேறி பாகிஸ்தானுக்கு திரும்புகிறார் பாபர் அஸாம்.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சென்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 24ம் தேதி லண்டனில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் வெறும் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் பாபர் அசாம்  68 ரன்களுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து, பாபர் அசாமின் கையை பதம்பார்த்தது. இதையடுத்து அவருக்கு கடுமையான கை வலி ஏற்பட்டது. அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டபோது முழங்கை எலும்பு உடைந்தது தெரியவந்தது.

முழங்கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் 6 வார காலம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், இங்கிலாந்து தொடரிலிருந்து பாபர் அசாம், பாகிஸ்தான் திரும்புகிறார்.

ஐபிஎல் 11வது சீசனில் பென் ஸ்டோக்ஸை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் அணி. ஆனால் பேட்டிங், பவுலிங் என எதிலுமே எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு சோபிக்காமல் ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றமளித்தார் ஸ்டோக்ஸ். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி, இங்கிலாந்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

6-6-6-6... யுவராஜ், விராட் கோலியின் சாதனையை அடித்து நொறுக்கிய அபிஷேக் ஷர்மா
IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!