
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிசுற்றில் லியான் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் வென்றது.
மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்று உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் நேற்று நடைப்பெற்றது.
இந்த ஆட்டத்தில் லியான் அணியும் - வொல்ப்ஸ்பர்க் அணியும் மோதின. ஜெர்மனியின் சாம்பியன் கிளப்பான வொல்ப்ஸ்பர்க் 93-வது நிமிடத்தில் கோலடித்தது முன்னிலை பெற்றது.
இருப்பினும், பிரெஞ்ச் நாட்டின் லியான் கிளப்பைச் சேர்ந்த அமன்டைன் ஹென்றி, லீ சோமர், அடா ஹெகர்பெர்க், காமிலி ஆகியோர் சிறப்பாக ஆடி கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இதன்மூலம் லியான் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஐந்தாவது முறையாக லியான் அணி இப்பட்டத்தை வெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.