
இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட முதல் இரண்டு வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய்தேவ் உனாத்கத். இவர்கள் இருவரையுமே ராஜஸ்தான் அணிதான் வாங்கியது. பென் ஸ்டோக்ஸை ரூ.12.5 கோடிக்கும் உனாத்கத்தை ரூ.11.5 கோடிக்கும் ராஜஸ்தான் அணி வாங்கியது.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் உனாத்கத் ஆகிய இருவருக்கு மட்டுமே ரூ.24 கோடியை ஒதுக்கியது. இரண்டே வீரருக்கு அதிகமான தொகை ஒதுக்கி வாங்கியது ராஜஸ்தான் அணிதான். ஆனால் இருவருமே கொடுத்த காசுக்கு தங்களது பங்களிப்பை அளிக்க தவறிவிட்டனர்.
பென் ஸ்டோக்ஸ்:
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், கடந்த ஐபிஎல்லில் புனே அணிக்காக ஆடினார். கடந்த ஐபிஎல் தொடரிலும் அதிகமான விலைக்கு வாங்கப்பட்டார். இம்முறை ராஜஸ்தான் அணிக்காக 10 போட்டியில் ஆடியுள்ள பென் ஸ்டோக்ஸ், பேட்டிங், பவுலிங் என எந்த வகையிலுமே அந்த அணியின் வெற்றிக்கு உதவவில்லை.
10 போட்டிகளில் ஆடியுள்ளார். 9 போட்டிகளில் 25 ஓவர்கள் பந்துவீசி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். 10 போட்டிகளில் பேட்டிங் ஆடி வெறும் 174 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதிக விலைக்கு வாங்கப்பட்டதற்கான எந்த பங்களிப்பையும் ஸ்டோக்ஸ் அளிக்கவில்லை. தற்போது எஞ்சிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராஜஸ்தான் அணிக்கு, இனியாவது கொடுத்த காசுக்கான பங்களிப்பை அளிக்க வேண்டும். தனக்கு கொடுக்கப்பட்ட தொகை, நியாயமானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டோக்ஸ் உள்ளார். திறமையை நிரூபித்து, ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற உதவுவாரா? என்று பார்ப்போம்..
ஜெய்தேவ் உனாத்கத்:
பென் ஸ்டொக்ஸுக்கு அடுத்தபடியாக அதிகவிலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் உனாத்கத். இவரையும் ராஜஸ்தான் அணிதான் எடுத்தது. ரூ.11.5 கோடிக்கு உனாத்கத்தை எடுத்தது. கடந்த ஐபிஎல் சீசனில் புனே அணிக்காக ஆடிய உனாத்கத், 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால், உனாத்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ரூ.11.5 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.
ஆனால் அவரும் சோபிக்க தவறிவிட்டார். 10 போட்டிகளில் 34 ஓவர்கள் வீசி வெறும் 8 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு 9.76 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். உனாத்கத்தும் தனக்கு கொடுக்கப்பட்ட தொகைக்கான பங்களிப்பை அளிக்கவில்லை. இவரும் தனக்கான தொகைக்கு தான் தகுதியானவர் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவரின் அபாரமான பங்களிப்பை எதிர்நோக்கும் இடத்தில்தான் ராஜஸ்தான் அணியும் இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.