இஷாந்த் சர்மா நீக்கப்பட்டதன் உண்மையான பின்னணி!!

By karthikeyan VFirst Published Jan 2, 2019, 6:37 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டார். அதற்கான காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டார். அதற்கான காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. 

இந்த போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் சர்மாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் நாடு திரும்பிவிட்டதால் அவருக்கு பதிலாக ராகுல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அஷ்வின் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று போட்டிகளில் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். குல்தீப் யாதவின் பெயரும் 13 பேர் கொண்ட பட்டியலில் உள்ளது. 

இஷாந்த் சர்மா கடந்த மூன்று போட்டிகளில் ஆடி 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சை விட ஷமி மற்றும் பும்ராவின் பவுலிங்தான் மிரட்டலாக இருந்தது. எனவே இஷாந்த் பவுலிங்கில் மிரட்டாததால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார் என கருதப்பட்டது. அணி நிர்வாகத்தின் இந்த முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தமட்டில் உமேஷ் யாதவை விட இஷாந்த் சர்மா எவ்வளவோ பரவாயில்லை. அவரை நீக்கிவிட்டு உமேஷை சேர்த்தது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இஷாந்த் சர்மாவிற்கு இடது விலா எலும்பில் வலி இருப்பதாகவும் அதனால் அவரை கடைசி போட்டியில் சேர்த்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதால்தான் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதாக பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. 
 

click me!