பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு நேற்று மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து, கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை வைரஸ் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 21 மாநிலங்களில் 653 பேருக்கு ஒமிக்ரான் பரவி உள்ளது. இதில், அதிகபட்சமாக மகாராஷ்ராவில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு நேற்று மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து, கொல்கத்தாவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் சவுரவ் கங்குலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 2021ம் ஆண்டு கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு இவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சில நாட்களில் உடல் நிலை சீரடைந்த நிலையில், கங்குலிக்கு கொரோனா பாதிக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.