ஐபிஎல் தொடக்க விழாவில் பணத்தை வீணடிக்க வேண்டாம்.. நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்கள் குடும்பத்துக்கு கொடுத்துடுவோம்!! பிசிசிஐ நல்ல முடிவு

By karthikeyan VFirst Published Feb 22, 2019, 4:42 PM IST
Highlights

மார்ச் 23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
 

ஐபிஎல்லில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 12வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. 

மக்களவை தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மனதில்வைத்து இந்த சீசனை வெளிநாட்டில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு சீசனும் இந்தியாவிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலும் நடைபெற இருப்பதால் ஐபிஎல் முழு தொடருக்குமான அட்டவணை வெளியிடப்படாமல் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதற்கேற்றவாறு எஞ்சிய போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளது. 

மார்ச் 23ம் தேதி ஐபிஎல் 12வது சீசன் தொடங்குகிறது. 23ம் தேதியிலிருந்து ஏப்ரல் 5ம் தேதி வரையிலான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சீசனில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த சீசனிலும் முதல் போட்டி சிஎஸ்கேவுக்குத்தான். மார்ச் 23ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.

வழக்கமாக ஐபிஎல் தொடர் கோலாகலமான விழாவுடன் தொடங்கும். ஆனால் இந்த முறை தொடக்க விழா நடத்தப்படாது என பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடக்க விழாவுக்கு செலவழிக்கும் பணத்தை புல்வாமா தாக்குதலில் நாட்டுக்காக உயிர்நீத்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 

click me!