உலக கோப்பை நெருங்குற நேரத்துல கேப்டனை மாற்றலாமா..? அது தவறான முடிவு.. அலெஸ்டர் குக் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 22, 2019, 3:58 PM IST
Highlights

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆட்டம் வேறு லெவலில் உள்ளது. வர இருக்கும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து அணி, இந்த முறை சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 
 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் வலுவான நிலையில் உள்ளன. இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் ஆட்டம் வேறு லெவலில் உள்ளது. வர இருக்கும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து அணி, இந்த முறை சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இந்நிலையில் இயன் மோர்கனுக்கு முன் இங்கிலாந்து கேப்டனாக இருந்த அலெஸ்டர் குக், திடீரென தன்னை மாற்றியது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கிய அலெஸ்டர் குக், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக இருந்த அவரது தலைமையில்தான் இங்கிலாந்து அணி, 2013 சாம்பியன்ஸ் டிராபியில் ஆடியது. இறுதி போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியிடம் தோற்று சாம்பியன்ஸ் டிராபியை இழந்தது. 

அதன்பிறகு 2015ம் ஆண்டு உலக கோப்பை நடக்கவிருந்த நிலையில், அதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக 2014ம் ஆண்டு குக் கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு இயன் மோர்கன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இயன் மோர்கனின் கேப்டன்சியில் 2015 உலக கோப்பையில் ஆடிய இங்கிலாந்து அணி, வங்கதேசத்திடம் தோல்வியை தழுவி, முதல் சுற்றிலேயே வெளியேறியது. 

அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அலெஸ்டர் குக், இயன் மோர்கன் அணியை திறம்பட வழிநடத்தி செல்கிறார். எனினும் 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக கேப்டன் மாற்றப்பட்டது தவறான முடிவு. போட்டியின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அந்த நான்கு வருடங்களில் அணியில் பெரியளவில் மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்று நினைத்தோம். ஆனால் கேப்டனை மாற்றியது தவறான முடிவு என குக் தெரிவித்துள்ளார். அதன்பிறகு குக் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 
 

click me!