இந்திய வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த பிசிசிஐ!! பண மழையில் நனையும் வெற்றி வீரர்கள்

By karthikeyan VFirst Published Jan 8, 2019, 4:20 PM IST
Highlights

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு போனஸ் அறிவித்து, வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது பிசிசிஐ. 
 

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு போனஸ் அறிவித்து, வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளது பிசிசிஐ. 

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருந்தபோதிலும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தொடர்களை இழந்து விமர்சனத்துக்கு உள்ளானது கோலி தலைமையிலான இந்திய அணி.

வெளிநாட்டு தொடரில் வென்றே தீர வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றது இந்திய அணி. அந்த நெருக்கடி மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதே இல்லாத இந்திய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி வெல்ல வேண்டிய கட்டாயத்திலும் நெருக்கடியிலும் இருந்தது. 

ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் இல்லாத வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது ஒருபுறமிருந்தாலும், இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. குறிப்பாக புஜாராவின் பேட்டிங்கும் பும்ராவின் பவுலிங்கும் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. 

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்கள் வெற்றி மகிழ்ச்சியில் குதூகலித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது பிசிசிஐ.  ஆடும் லெவனில் இடம்பெற்ற வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சமும் பென்ச்சில் இருந்த வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ.7.5 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் தலா ரூ.25 லட்சமும் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!