உலக கோப்பையில் அந்த பையன் கண்டிப்பா ஆடுவான்!! கங்குலி போட்ட போட்டில் தலைதெறிக்க ஓடிவந்து உறுதியளித்த தேர்வுக்குழு தலைவர்

By karthikeyan VFirst Published Jan 8, 2019, 2:38 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய அணி, உலக கோப்பையை மனதில் வைத்து தேர்வு செய்யப்பட்ட அணி. இந்த தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அணி தான் உலக கோப்பைக்கான அணியாக இருக்கும். 

உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக ரிஷப் பண்ட் இருப்பார் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் உறுதியளித்துள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் ஒரு சதம், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சதம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருமுறை 90 ரன்களுக்கு மேல் அடித்தது என தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். 

ரிஷப்பின் விக்கெட் கீப்பிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இளம் வீரரான அவர், பயம் என்பதே என்னவென்று தெரியாமல் அடித்து ஆடுகிறார். பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுகிறார். தோனிக்கு அடுத்து அவரை அனைத்து விதமான இந்திய அணிக்கும் நிரந்தர விக்கெட் கீப்பராக்கும் விதமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்ற ரிஷப், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான இந்திய அணி, உலக கோப்பையை மனதில் வைத்து தேர்வு செய்யப்பட்ட அணி. இந்த தொடர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட அணி தான் உலக கோப்பைக்கான அணியாக இருக்கும். அந்த வகையில் இந்த தொடர்களில் ரிஷப் பண்ட் புறக்கணிக்கப்பட்டதால், அவருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு இல்லை என்று தேர்வுக்குழு மறைமுகமாக தெரிவித்ததாக கருதப்பட்டது. 

ரிஷப் பண்ட்டை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவைக்க வேண்டும் எனவும், 5 ஓவர்களில் ஆட்டத்தையே மாற்றக்கூடிய திறமைமிக்க ரிஷப்பை உலக கோப்பை அணியில் எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் நீக்கம் குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூவருமே சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். தொடர்ந்து ஆடிவரும் ரிஷப் பண்ட்டிற்கு ஓய்வளிக்கும் விதமாகவே ஒருநாள் அணியிலிருந்து சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அவருக்கு சில இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். அவர் அதையெல்லாம் முடித்துவிட்டு அணிக்கு திரும்பலாம். சிட்னி டெஸ்ட் போட்டி அவரது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று பிரசாத் தெரிவித்தார். 

click me!