நியூஸிலாந்துக்கு எதிராக அன்னிய மண்ணில் முதல் வெற்றி பெற்றது வங்கதேசம்...

 
Published : May 26, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
நியூஸிலாந்துக்கு எதிராக அன்னிய மண்ணில் முதல் வெற்றி பெற்றது வங்கதேசம்...

சுருக்கம்

Bangladesh won the first ever win against New Zealand

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி ஆட்டத்தில் அன்னிய மண்ணில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது வங்கதேசம்.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச தீர்மானித்தது.

பேட் செய்த நியூஸிலாந்து அணியில் கேப்டன் டாம் லதாம் அதிகபட்சமாக 84 ஓட்டங்கள் விளாசினார். அடுத்தபடியாக நீல் புரூம் 63 ஓட்டங்கள், கோரி ஆண்டர்சன் 24 ஓட்டங்கள் எடுத்தனர்.

எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ஓட்டங்கள் எடுத்தது நியூஸிலாந்து.

ஜீதன் படேல் 7 ஓட்டங்கள், ராஸ் டெய்லர் 60 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேச தரப்பில் அதிகபட்சமாக மோர்டாஸா, நாசிர், ஷாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய வங்கதேசத்தில் தொடக்க வீரர் தமீம் இக்பால் 65 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிக்க, அடுத்து வந்த செளம்யா சர்கார் டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த சபீர் ரஹ்மான் 65 ஓட்டங்கள், மொஸாடெக் 10 ஓட்டங்கள், ஷாகிப் அல் ஹசன் 19 ஓட்டங்களில் வீழ்ந்ததை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் எடுத்து வென்றது வங்கதேசம்.

முஷ்ஃபிகர் ரஹீம் 45 ஓட்டங்கள், மஹ்முதுல்லா 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜீதன் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனிடையே நியூஸிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து அணிகள் பங்கேற்ற இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது. அந்த அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றியை பதிவு செய்தது.

நியூஸிலாந்துக்கு எதிராக அன்னிய மண்ணில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஐபிஎல் மினி ஏலத்தில் பெரும் தவறு செய்த சிஎஸ்கே.. குறைகளை சுட்டிக்காட்டிய ஜாம்பவான்!
IND vs SA 4வது T20 போட்டி ரத்து..! காத்திருந்து.. காத்திருந்து.. ஏமாந்த ரசிகர்கள்.. இதுதான் காரணம்!