இங்கிலாந்தை வெற்றிக் கண்டது வங்கதேசம்…

Asianet News Tamil  
Published : Oct 11, 2016, 01:58 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
இங்கிலாந்தை வெற்றிக் கண்டது வங்கதேசம்…

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம்.

வங்கதேசத்தின் மிர்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மகமதுல்லா 75 ரன்கள் குவித்தார். கேப்டன் மோர்ட்டஸா 29 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித், ஜேக் பால் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி, வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 44.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 57 ரன்கள் எடுத்தார்.

வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா 4 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹமது 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

மோர்ட்டஸா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs WI 1st ODI: கோலி, கில் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
Virat Kohli: 15,000 ரன்களை தொட்ட ‘கிங்’ கோலி.. மிரட்டல் சாதனை படைத்த ரன் மெஷின்..!