world wrestling championships: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் பஜ்ரங் பூனியா

By Pothy RajFirst Published Sep 19, 2022, 2:59 PM IST
Highlights

செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

செர்பியாவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 4 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பஜ்ரங் பூனியா பெற்றுள்ளார். 

செர்பியாவின் பெல்கிரேட் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் பியூரிட்டோ ரிகோ வீரர் செபாஸ்டியன் சி ரிவேராவை 11-9 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை பூனியா கைப்பற்றினார். 

காலிறுதியில் அமெரிக்க வீரர் ஜான் மைக்கேல் டியாகோமிகைலிடம் வீழ்ந்த பஜ்ரங் பூனியா, வெண்கலப்பதக்கத்துக்கான சுற்றுக்கு தகுதிபெற்றார். 

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பஜ்ரங் பூனியா வெல்லும் 3வது வெண்கலப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் 2013, 2018, 2019ம் ஆண்டுகளில் வெண்கலப் பதக்கம் வென்றார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

30 பேர் கொண்ட இந்திய மல்யுத்த அணி உலக சாம்பியன்ஷிப்பில் பங்கெடுத்தது. ஆனால், 2 பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன. டோக்கியோ ஒலிம்பிக் வெள்ளி வென்ற வீரர் ரவிகுமார் தைய்யா தொடக்கத்திலேயே வெளியேறினார். 

இந்திய வீராங்கனை வினீஷ் போகத் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் தனது 2வது பதக்கத்தைக் கைப்பற்றினார். வெண்கலத்துக்கான போட்டியில், ஸ்வீடன் வீராங்கனை எம்மா மால்க்ரீனை வீழ்த்தினார் போகத்.

click me!