உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ….. இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலம் வென்றார்

By Selvanayagam PFirst Published Sep 20, 2019, 8:36 PM IST
Highlights

ஜகஸ்தானில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவி்ல இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், 63 கிலோ எடைப்பிரிவில் மணிஷ் கவுசிக்கும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்

கஜகஸ்தானின் நூர் சுல்தான் நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. ஆடவருக்கான 65 கிலோஎடைப்பிரிவில் 3-வது இடத்துக்கான போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியாவும், மங்கோலிய வீரர் துல்கா துமுர் ஓசிரும் மோதினர்.

இந்த போட்டியில், துல்கா துமுரை 8-7 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலம் வென்றார். தொடக்கத்தல் 2-7 என்ற கணக்கில் பூனியா பின்தங்கி இருந்தார். அதன்பின் அவரின் விடாமுயற்சியால் மங்கோலிய வீரரை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார். பூனியாவுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இது 3-வது பதக்கமாகும்.

வட கொரியாவின் ஜாங் சங்கை 8-0 என்ற கணக்கில் நேற்று நடந்த போட்டியில் பூனியா வீழ்த்தியதைத் தொடர்்ந்து டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றார்.

மற்றொரு இந்திய வீரர் கவுசிக் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலம் வென்றார். கியூபா நாட்டு வீரர் ஆண்டி கோம்ஸை 0-5என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றினார் கவுசிக்.

click me!