
ஒவ்வொரு ஆண்டும் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 20 பணக்கார வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த 20 பேர் கொண்ட பட்டியலில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மட்டுமே இடம் பெற்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் பணக்கார வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மட்டும் ஸ்வியாடெக் 23.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் ரூ.199 கோடி) வரையில் சம்பாதித்து உள்ளார். இந்தியாவின் பிவி சிந்து ரூ.60 கோடி வரையில் சம்பாதித்து 16ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் பிவி சிந்து பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிவி சிந்து ஹைதராபாத்திலிருந்து பெங்களுருக்கு குடியேறியுள்ளார். வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.