Australian Open 2022: 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்தார் ரஃபேல் நடால்

Published : Jan 30, 2022, 08:55 PM IST
Australian Open 2022: 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று உலக சாதனை படைத்தார் ரஃபேல் நடால்

சுருக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஃபைனலில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை வீழ்த்தி 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்தார் ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால்.  

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் அபாரமாக விளையாடிய ஸ்பெய்ன் வீரர் ரஃபேல் நடால் ஃபைனலுக்கு முன்னேறினார். ஃபைனலில் ரஷ்யாவின் மெத்வதேவை எதிர்கொண்டு ஆடினார். 

நடால் - டேனியல் இடையே கடும் போட்டி நிலவியது. மெல்போர்னில் நடந்த இந்த போட்டி  5 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்தது. முதல் 2 செட்களை 2-6, 6-7(5) என இழந்த நடால், அடுத்த 3 செட்களை 6-4, 6-4, 7-5 என வென்று பட்டத்தை வென்றார்.

இது ரஃபேல் நடால் வென்ற 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிகமான பட்டங்களை வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் நடால்.

அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றதுதான், ஓபன் டென்னிஸில் ஒரு தனிநபர் வென்ற அதிக பட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே 2009 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற ரஃபேல் நடால், 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது 2வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் பட்டம் வென்றார். 

இதற்கு முன் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடெரர், நோவாக் ஜோகோவிச் ஆகிய மூவருமே தலா 20 ஆடவர் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தனர். இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் விளையாடாத நிலையில், இம்முறை பட்டம் வென்று, ஜோகோவிச், ஃபெடரர் ஆகிய இருவரையும் விர ஒரு கிராண்ட்ஸ்லாமை அதிகம் வென்ற டென்னிஸ் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரஃபேல் நடால்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!