கார் விபத்தில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணம்...! நண்பனை இழந்து தவிக்கிறோம்... கிரிக்கெட் வீரர்கள் வேதனை...

By Ajmal KhanFirst Published May 15, 2022, 8:33 AM IST
Highlights

பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்களை  அதிர்ச்சிஅடையவைத்துள்ளது. தங்களது நண்பனை இழந்து தவிப்பதாக கிரிக்கெட் வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  தனது 46வது வயதில் கார் விபத்தில் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். சைமண்ட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸின் மரணம் குறித்த சோகமான செய்தியைத் தொடர்ந்து, கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198  ஒருதின போட்டிகளிலும், 26 டெஸ் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை செலுத்தியவர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,  

Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul 🙏

— Harbhajan Turbanator (@harbhajan_singh)

 

 

கார் விபத்தில் உயிரிழப்பு

 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர்  வர்ணணனையாளராகவும் செயல்பட்டுள்ளார். இந்தநிலையில் ஆஸ்திலேலியாவில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான  டவுன்ஸ்வில்லில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் ஒரு வாகன விபத்தில்  ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மட்டுமில்லாமல் உலக கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேதனையில் கிரிக்கெட் உலகம்

 ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயரிழந்தது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட கிரிக்கெட் வீர்ர்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மனம் வேதனையில் தவிப்பதாவும், தனது நண்பனை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  கில்லஸ்பி கூறுகையில் மிக மோசமான மற்றும் அதிர்ச்சியான செய்தி என குறிப்பிட்டுள்ளார். முற்றிலும் பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகிப் அக்தர் கூறுகையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். களத்திலும் வெளியிலும் சிறந்த உறவோடு இருந்ததாக தெரிவித்துள்ளார்.  அவரது மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

 

Think of your most loyal, fun, loving friend who would do anything for you. That’s Roy. 💔😞

— Adam Gilchrist (@gilly381)

 

சோகத்தில் ஆஸ்திரேலிய மக்கள்

இந்திய மக்களுக்கு இந்த துயர செய்தி அதிர்ச்சி அளிப்பதாக விவிஎஸ். லட்சுமணன் தெரிவித்துள்ளார். இது போல பல்வேறு முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஷேன் வார்னே இறந்த சம்பவம் ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான்  ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு ஆஸ்திரேலியா மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Horrendous news to wake up to.
Utterly devastated. We are all gonna miss you mate.☹️

— Jason Gillespie 🌱 (@dizzy259)

Breaking:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்

 

 

click me!