Breaking:ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்

By Ajmal Khan  |  First Published May 15, 2022, 6:57 AM IST

பிரபல கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிரிகெட்  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக 198  ஒருதின போட்டிகளிலும்  விளையாடியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக  இரண்டு முறை உலகக் கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை கைப்பற்ற மிக முக்கிய பங்காற்றினார். இந்தநிலையில் ஆஸ்திலேலியாவில் உள்ள தனது வீடு இருக்கும் பகுதியான  டவுன்ஸ்வில்லில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெர்வி ரேஞ்சில் ஒரு வாகன விபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்  கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

இரவு 11 மணிக்குப் பிறகு, ஹெர்வி ரேஞ்ச் சாலையில், ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் அருகே கார் ஓட்டிச் செல்லப்பட்டபோது, ​​சாலையை  விட்டு கார் வெளியேறி  சாலையில் உருண்டதாக ஆரம்ப கட்ட தகவல் தெரிவிக்கிறது.  இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளந்து. இந்த தகவலை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மாதம் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னின் அதிர்ச்சி மரணம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது  ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

click me!