ipl 2022: csk: jadeja: சிஎஸ்கே நிர்வாகம்-ஜடேஜா இடையே நடந்தது என்ன? முதல்முறையாக மவுனம் கலைத்த சிஇஓ விஸ்வநாதன்

By Pothy RajFirst Published May 14, 2022, 5:39 PM IST
Highlights

ipl 2022: csk: jadeja:சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ரவிந்திர ஜடேஜா இடையே என்ன பிரச்சினை நடந்தது என இதுவரை மர்மமாக இருக்கும் நிலையில் முதல்முறையாக சிஇஓ விஸ்வநாதன் மவுனம் கலைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், ரவிந்திர ஜடேஜா இடையே என்ன பிரச்சினை நடந்தது என இதுவரை மர்மமாக இருக்கும் நிலையில் முதல்முறையாக சிஇஓ விஸ்வநாதன் மவுனம் கலைத்துள்ளார்.

2022ம் ஆண்டு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு நல்லவிதமாகத் தொடங்கவில்லை. போட்டித் தொடர் தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன் கேப்டன் பதவி மாற்றப்பட்டு, ரவிந்திர ஜடேஜாவிடம் வழங்கப்பட்டது.

கேப்டன்ஷிப்பில் சிறிதும் அனுபவம் இல்லாத அவரிடம் வழங்கப்பட்டதிலிருந்து அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. பேட்டிங், பந்துவீச்சில் நல்ல ஃபார்மில் இருந்த ரவிந்திர ஜடேஜாவின் ஃபார்மும் காலியானது. கடைசியில் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு, மீண்டும் தோனியிடம் வழங்கப்பட்டது.

தோனியிடம் கேப்டன் பதவி வழங்கப்பட்டபின் 3 போட்டிகளில் 2ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வென்றது. இதற்கிடையே காயம் காரணமாக ஜடேஜா எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் திடீரென அறிக்கை வெளியானது வியப்பை ஏற்படுத்தியது.

 அதுமட்டுமல்லாமல் ரவிந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சிஎஸ்கே நிர்வாகம் அவரை அன்-பாலோ செய்தது. இது பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் கிளப்பியது. சமூக ஊடகங்களில் ஜடேஜா, சிஎஸ்கே நிர்வாகம் இடையே மோதல் ஏற்பட்டது, அதனால்தான் ஜடேஜா சென்றுவிட்டார். காயம் ஏதும் இ்ல்லை என்ற தகவல் வெளியானது.

ஆனால், இந்த தகவலை இதுவரை சிஎஸ்கேநிர்வாகம் மறுக்கவும் இல்லை, விளக்கம் அளிக்கவும் இல்லை. இந்த சூழலில் முக்கியமான பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இன்று திடீரென இந்த ஐபிஎல் சீசனிலிருந்து ஓய்வு பெறப்போவதாக ட்விட்டரில் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த ட்வீ்ட்டை நீக்கிவிட்டார். 

இது மேலும் குழப்பத்தை அதிகப்படுத்தியநிலையில், சிஎஸ்கே அணிக்குள் என்னதான் நடக்கிறது என்று ரசிகர்கள் ட்வி்ட்டர், இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போடத் தொடங்கினர்.  இதையடுத்து, அம்பதி ராயுடு, 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர்வரை விளையாடுவார் அவர் ஓய்வு பெறமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.

ரவிந்திர ஜடேஜா விவகாரம் குறித்து சிஎஸ்கே முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது உண்மைதான். அதில் சந்தேகம் ஏதும் இல்லை. அதேநேரம், ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையிலான உறவு நல்லவிதமாக இல்லை என்ற தகவலும் உண்மைதான் அதை மறுப்பதற்கில்லை. கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டிதிலுருந்து அணிக்குள் எதுவுமே சரியாக நடக்கவில்லை. ஜடேஜா ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தார், அதன்பின் அவர் இயல்பாக இல்லை” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே சிஎஸ்கேஅணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் “ சமூக ஊடகங்களில் விவாதிக்கப்படும் விஷயம் பற்றி எனக்குத் தெரியாது. சமூக ஊடங்களை நான் பார்ப்பதில்லை, எதையும் பின்பற்றுவதில்லை. என்ன நடக்கிறது என்பது தெரியாது. சிஎஸ்கே நிர்வாகம் தரப்பிலிருந்து நான் சொல்ல முடியுமென்றால், சமூக ஊடகங்களில் பேசப்படுவதுபோன்று, எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அதுபற்றி என்னப் பேசப்பட்டாலும் எனக்குத் தெரியாது. ஜடேஜா சிஎஸ்கே அணியில்தான் தொடர்கிறார், எப்போதும் தொடர்வார்” எனத் தெரிவித்தார்

click me!