ambati rayudu twitter: ipl 2022:அம்பதி ராயுடு உண்மையில் ஓய்வு பெறுகிறாரா?;என்ன சொல்கிறது சிஎஸ்கே அணி நிர்வாகம்

By Pothy RajFirst Published May 14, 2022, 4:19 PM IST
Highlights

ambati rayudu twitter: ipl 2022:  சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று டவிட் செய்துவிட்டு,பின்னர் நீக்கியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சிஎஸ்கே அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று டவிட் செய்துவிட்டு,பின்னர் நீக்கியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டு சீசன் மோசமாகஅமைந்துவிட்டது. கேப்டன் மாற்றம் செய்யப்பட்டு ரவிந்திர ஜடேஜா தலைமையில் சென்று பல போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால், தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், ரவிந்திர ஜடேஜாவுக்கும், சிஎஸ்கேநிர்வாகத்துக்கும் இடையே ஏதோ மோதல் ஏற்பட ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக காயத்தை காரணம் காட்டி சென்றுவிட்டார்

இதற்கிடையே கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்கு முக்கியத் தூணாக இருந்துவரும் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இன்று ட்விட்டரில் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கடைசி, அதன்பின் விளையாடமாட்டேன், ஓய்வு பெறப் போகிறேன் என்று ட்விட் செய்து, சிறது நேரத்தில் அந்த ட்வீ்ட்டை நீக்கினார். 

அதில், “இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இரு பெரிய அணிகளில் நான் இடம் பெற்று 13 ஆண்டுகள் விளையாடியது அற்புதமானது. அற்புதமான கிரிக்கெட் பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். அம்பதி ராயுடுவின் ட்விட் கிரிக்கெட் உலகிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சிஎஸ்கே அணியிலும் அதிமாக ரன் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையிலும் ராயுடு இருந்து வருகிறார். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலையில் தொடரிலிருந்து வெளியேற உள்ளது. இந்த சீசனில் ராயுடு 12 போட்டிகளில் 271 ரன்கள் குவித்து சராசரியாக 27 வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அம்பதி ராயுடு விளையாடிய காலத்தில் அந்த அணிக்காக 2,416 ரன்கள் சேரத்துள்ளார்.ஆனால்  சிஎஸ்கே அணிக்காக ராயுடு இதுவரை 1771 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் 8அரைசதம், ஒரு சதம் அடங்கும்.

அம்பதி ராயுடுவின் ட்விட் குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், “ அம்பதி ராயுடு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்பது தவறான செய்தி. அவர் ஓய்வு பெறவில்லை. நாங்கள் கவலைப்படமாட்டோம்” எனத் தெரிவித்தார்

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடர்வரை ராயுடு சிஎஸ்கேஅணியில் நீடிப்பாரா என்ற கேள்விக்கு, வி்ஸ்வநாதன் “ ஆமாம், அவர் இருப்பார், ஓய்வு பெறமாட்டார்” எனத் தெரிவித்தார்

சிஎஸ்கே அணி 2 ஆண்டுகள் தடைக்குப்பின் மீண்டும் வந்தபோது ஏலத்தில் ரூ.2.20 கோடிக்கு அம்பதி ராயுடு வாங்கப்பட்டார்.அதன்பின் 2022 ஏலத்தில், ராயுடுமீதான நம்பிக்கையால் சன்ரைசர்ஸ் அணியுடன் போட்டியிட்டு ரூ.6.75 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

click me!