ipl 2022: srh vs kkr: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? SRH vs KKR இன்று மோதல்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 14, 2022, 03:22 PM IST
ipl 2022: srh vs kkr: ப்ளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? SRH vs KKR இன்று மோதல்: இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ipl 2022: srh vs kkr : புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியமான லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திவிட்டால், சன்ரைசர்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் வாயப்பு 40% உறுதியாகிவிடும்.எஞ்சியுள்ள போட்டிகளில் வென்றாலே சன்ரைசர்ஸ் போதுமானது. ஆனால், கொல்கத்தா  அணிக்கு இ்ந்த ஆட்டம் நாக்அவுட் போன்றது, இதில் தோற்றால், தொடரிலிருந்து வெளியேற வேண்டியதுதான்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற உத்வேகத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது. கடந்த சில போட்டிகளாக ஆன்ட்ரூ ரஸல் பொறுப்புடன் ஆடி வருகிறார், இந்தஆட்டத்திலும் அது தொடர்ந்தால் அந்த அணிக்கு சாதகமாக அமையும். வெங்கடேஷ் ஐயர், ரஹானே இருவருமே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது.
பாட் கம்மின்ஸுக்கு இடுப்புப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

அவருக்குப் பதிலாக டிம் சவுதி களமிறங்குவார். சுழற்பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி களமிறங்குவார்கள். நடுவரிசையில் ராணா, ரிங்கு சிங்கு, பின்வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யரும் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. 

சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்து இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு பின்னடைவாகும். இருவரில் ஒருவர் உடற்தகுதி பெற்றால் களமிறங்குவார்கள். இல்லாவிட்டால் புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், சீன் அபாட் பந்துவீசுவார்கள். அபிஷேக் சர்மா, சுசித் இரு சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படுவர்கள். இந்த சீசனில் வில்லியம்ஸன் இதுவரை பெரிதாக எந்த இன்னிங்ஸும் ஆடவில்லை என்பதால், இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

புனே ஆடுகளத்தில் பெரும்பாலும் முதலில் பேட் செய்யும் அணியே அதிகமாக வெல்லும் வாய்ப்புள்ளது. ஆதலால் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 160 ரன்களுக்கு மேல் அடிக்கலாம். சேஸிங் செய்யும் அணி 146 ரன்கள் சராசரியாக இருக்கிறது. ஆனால், பவர்ப்ளேயை சரியாகப் பயன்படுத்தினால் சேஸிங் எளிதாகும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(உத்தேசலெவன்)

வெங்கடேஷ் அய்யர், அஜின்கயே ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆன்ட்ரே ரஸல், சுனில் நரேன், ஷெல்டன் ஜேக்ஸன், டிம் சவுதி, ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி

சன்ரைசர்ஸ் ஹைதர்பாத்

கேன் வில்லியம்ஸன், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷசாங் சிங், ஜெகதீஸ் சுசித், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், பஸல் ஹக், உம்ரான் மாலிக்
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்தியாவுக்கு மீண்டும் வருவேன்! கால்பந்து ரசிகர்களுக்கு மெஸ்ஸி சொன்ன குட்நியூஸ்!
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!