ambati rayudu ipl : ipl 2022: csk ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு: சிறிதுநேரத்தில் ட்வீ்ட்டை நீக்கிய அம்பதி ராயுடு

By Pothy RajFirst Published May 14, 2022, 2:18 PM IST
Highlights

ambati rayudu ipl : ipl 2022: csk:  ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிவரும் அம்பதி ராயுடு, இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப் போகிறேன் என்று ட்விட்டரில்  அறிவித்து பரபரப்ப ஏற்படுத்தினார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிவரும் அம்பதி ராயுடு, இந்த ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறப் போகிறேன் என்று ட்விட்டரில்  அறிவித்து பரபரப்ப ஏற்படுத்தினார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்

2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தனது வாழ்க்கையை அம்பதி ராயுடு தொடங்கினார். 2017ம் ஆண்டுவரை அந்த அணியில் ராயுடு தொடர்ந்தார். 2018ம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால்  ராயுடு வாங்கப்பட்டு, இன்றுவரை சிஎஸ்கே அணியில் தொடர்ந்து வருகிறார்

ஐபிஎல் ரெக்கார்டை ஆய்வு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் சீராக விளையாடும், ரன் சேர்க்கும் பேட்ஸ்மேன்களில் அம்பதி ராயுடு இருந்து வருகிறார். இதுவரை 4,187 ரன்களை ஐபிஎல் தொடரில் சேர்த்து, 29.28 சராசரி வைத்துள்ளார். 

சிஎஸ்கே அணியிலும் அதிகமா ரன் சேர்த்த பேட்ஸ்மேன்கள் வரிசையிலும் ராயுடு இருந்து வருகிறார். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலையில் தொடரிலிருந்து வெளியேற உள்ளது. இந்த சீசனில் ராயுடு 12 போட்டிகளில் 271 ரன்கள் குவித்து சராசரியாக 27 வைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அம்பதி ராயுடு விளையாடிய காலத்தில் அந்த அணிக்காக 2,416 ரன்கள் சேரத்துள்ளார்.ஆனால்  சிஎஸ்கே அணிக்காக ராயுடு இதுவரை 1771 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், இதில் 8அரைசதம், ஒரு சதம் அடங்கும். 

ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடிவரும் அம்பதி ராயுடு இதுவரை சர்வதேச  போட்டிகளில் விளையாடியதில்லை. 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் ராயுடு இடம் பெற்றார். ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட இந்திய அணியில் ராயுடு தேர்வாகவில்லை, அவருக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்தக் கோபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்

இந்நிலையில் சிஎஸ்கே அணி இந்த சீசனில் மிகவும் மோசமாக ஆடி வரும் நிலையில் ஏற்கெனவே ரவிந்திர ஜடேஜா திடீரென காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.அவர் காயத்தால் விலகினாரா, அல்லது அணி நிர்வாகத்துடன் மனக்கசப்பில் விலகினாரா என்பது இதுவரை தெளிவாகவில்லை.

இந்தசூழலில் அம்பதி ராயுடு, இந்த ஐபிஎல் டி20 சீசனோடு தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்து, சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார். அந்த ட்வி்ட்டில் “ இதுதான் என்னுடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இரு பெரிய அணிகளில் நான் இடம் பெற்று 13 ஆண்டுகள் விளையாடியது அற்புதமானது. அற்புதமான கிரிக்கெட் பயணத்தை அமைத்துக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிக்கு உண்மையாகவே நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். ஆனால், சிறிது நேரத்தி்ல ட்வீட்டை நீக்கிவிட்டார்
 

click me!