தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்.. விஜய் சங்கர் அவுட்!! இந்திய அணி பேட்டிங்

Published : Feb 24, 2019, 06:56 PM IST
தொடக்க ஜோடியில் அதிரடி மாற்றம்.. விஜய் சங்கர் அவுட்!! இந்திய அணி பேட்டிங்

சுருக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங் தேர்வு செய்தார்.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங் தேர்வு செய்தார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது. இந்திய அணியில் தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக ராகுல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு பதிலாக மயன்க் மார்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாஹல், மார்கண்டே, குருணல் பாண்டியா ஆகிய மூன்று ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. உமேஷ் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சாளர்கள். ராகுலை பரிசோதிக்கும் விதமாக தவானுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித், ராகுல், கோலி(கேப்டன்), ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா, மார்கண்டே, சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ்.

PREV
click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?