ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் 11 வீரர்கள்!! முன்னாள் வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published Feb 24, 2019, 6:10 PM IST
Highlights

இரு அணி வீரர்களுமே போட்டியில் வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் இந்த தொடரில் மயன்க் மார்கண்டே எடுக்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுலும் 15 வீரர்கள் கொண்ட அணியில் உள்ளனர். 
 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி. 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, அதேபோலவே சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

இரண்டு டி20 போட்டிகளும் அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. முதல் டி20 போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ள நிலையில், உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், இதில் வென்று அதே உத்வேகத்துடன் உலக கோப்பைக்கு செல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அந்நிய மண்ணிலேயே வெற்றிகளை குவித்து வரும் வலுவான இந்திய அணியை, சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. 

இரு அணி வீரர்களுமே போட்டியில் வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் இந்த தொடரில் மயன்க் மார்கண்டே எடுக்கப்பட்டுள்ளார். சித்தார்த் கவுலும் 15 வீரர்கள் கொண்ட அணியில் உள்ளனர். 

இந்நிலையில், முதல் டி20 போட்டியில் எந்த 11 வீரர்களை இறக்கலாம் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் எப்படியும் அணியில் இருப்பார், எனினும் தோனிக்கு பதிலாக அவரை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். அதேபோல பும்ரா, சித்தார்த் கவுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம் எனவும் ஸ்பின் பவுலர்களாக சாஹல் மற்றும் மார்கண்டே ஆகிய இருவரையும் அணியில் எடுக்கலாம். விஜய் சங்கர் மற்றும் குருணல் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவரை எடுக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ள அணி:

கோலி(கேப்டன்), ரோஹித், தவான், ரிஷப், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்/குருணல் பாண்டியா, சாஹல், மார்கண்டே, பும்ரா, கவுல், உமேஷ்.
 

click me!