மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா...

Asianet News Tamil  
Published : Mar 16, 2018, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா...

சுருக்கம்

Australia defeated India in the women cricket tournament

மக​ளிர் கிரிக்​கெட்​டில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்கெட் ஆட்டத்​தில் 60 ஓட்டங்கள் வித்​தி​யா​சத்​தில் வெற்றி பெற்​றதை​ய​டுத்து மூன்று ஆட்டங்​கள் கொண்ட இந்​தத் தொடரை 2-0 என்ற கணக்​கில் ஆஸ்திரேலியா அணி கைப்​பற்​றி​யுள்​ளது.

மக​ளிர் கிரிக்​கெட்​டில் இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்கெட் ஆட்டம் குஜ​ராத் மாநிலம் வதோ​த​ரா​வில் நேற்று நடை​பெற்றது.

இந்த ஆட்டத்​தில் முத​லில் பேட் செய்த ஆஸ்​தி​ரே​லியா 50 ஓவர்​க​ளில் 9 விக்கெட் இழப்​புக்கு 287 ஓட்டங்கள் அடித்​தது.

அடுத்து ஆடிய இந்​தியா 49.2 ஓவர்​க​ளில் 227 ஓட்டங்க​ளுக்கு அனைத்து விக்​கெட்​டு​க​ளை​யும் இழந்தது.

டாஸ் வென்ற இந்​தியா, முத​லில் பந்​து​வீச தீர்​மா​னித்​தது. பேட் செய்த ஆஸ்​தி​ரே​லி​யா​வில் தொடக்க வீராங்​கனை நிகோல் போல்​டன் அதி​க​பட்​ச​மாக 12 பவுண்​ட​ரி​கள் உள்​பட 84 ஓட்டங்கள் எடுத்​தார். அடுத்​த​ப​டி​யாக பெத் மூனி 56 ஓட்டங்கள், கேப்​டன் மெக் லேனிங் 24 ஓட்டங்கள், அலிசா ஹீலி 19 ஓட்டங்கள், நிகோலா கேரி 16 ஓட்டங்கள் சேர்த்​த​னர்.

ஜெஸ் ஜோன​சன், ஆஷ்லே கார்​ட​னர் ஆகி​யோர் ஒற்றை இலக்க ரன்​னில் வெளி​யேற, அமன்டா வெலிங்​டன், ரேச்​சல் ஹேய்ஸ் ஆகி​யோர் டக் அவுட்​டா​கி​னர். எலிஸ் பெர்ரி 6 பவுண்​ட​ரி​கள், 2 சிக்​ஸர்​கள் உள்​பட 70 ஓட்டங்களு​ட​னும், மீகன் ஷட் ஓட்டங்கள் இன்​றி​யும் ஆட்ட​மி​ழக்​கா​மல் இருந்​த​னர்.

இந்​திய தரப்​பில் ஷிக்ஷா பாண்டே 3, பூனம் யாதவ் 2, எக்தா பிஷ்த், ஹர்​மன்​பி​ரீத் கெளர் தலா ஒரு விக்கெட் சாய்த்​த​னர்.

பின்​னர் ஆடிய இந்​திய அணி​யில் ஸ்மி​ருதி மந்​தனா மட்டும் 12 பவுண்​ட​ரி​கள், ஒரு சிக்​ஸர் உள்​பட 67 ஓட்டங்கள் எடுத்​தார். பூஜா வஸ்த்​ர​கர் 30 ஓட்டங்கள், பூனம் ராவத் 27 ஓட்டங்கள், தீப்தி சர்மா 26 ஓட்டங்கள் எடுக்க, ஹர்​மன்​பி​ரீத் கெளர் 17 ஓட்டங்கள், கேப்​டன் மிதாலி ராஜ் 15 ஓட்டங்கள், ஷிக்ஷா பாண்டே 15 ஓட்டங்க​ளு​டன் நடை​யைக் கட்டி​னர். வேதா கிருஷ்​ண​மூர்த்தி, சுஷ்மா வர்மா, பூனம் யாதவ் ஒற்றை இலக்க ரன்​னில் வீழ்ந்​த​னர்.

ஆஸ்​தி​ரே​லிய தரப்​பில் ஜோன​சன் 3, எலிஸ், வெலிங்​டன் தலா 2, மீகன், கார்​ட​னர், கேரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்​த​னர்.

ஆஸ்​தி​ரே​லி​யா​வின் நிகோல் போல்​டன் ஆட்​ட​நா​ய​கி​யா​னார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?