
சர்வதேச கால்பந்து சங்கங்களுக்கான சம்மேளனத்தின் (ஃபிஃபா) தரவரிசைப் பட்டியலில் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு இந்தியா 99-வது இடத்துக்கு வந்துள்ளது.
இந்தியா, தரவரிசை மதிப்பீட்டு காலகட்டத்தில் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டில் முதல் முறையாக முதல் 100 இடங்களுக்குள்ளாக வந்துள்ள இந்தியா, தற்போது 339 புள்ளிகளோடு லிபியாவுடன் தனது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.
கடந்த ஆண்டில் மூன்று முறை 100 இடங்களுக்குள்ளாக வந்த இந்தியா இறுதியாக 105-வது இடத்துடன் 2017-ஆம் ஆண்டை நிறைவு செய்தது. இந்தியா தனது தரவரிசை வரலாற்றில் அதிகபட்சமாக கடந்த 1996-ஆம் ஆண்டு 94-வது இடம் வரை முன்னேறியிருந்தது.
இதனிடையே, சர்வதேச தரவரிசையில் ஆசிய நாடுகளின் வரிசையில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. அதனையடுத்து கத்தார், ஓமன், ஜோர்டான், பஹ்ரைன், வட கொரியா அணிகள் உள்ளன.
ஆசிய நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஈரான், சர்வதேச வரிசையில் 33-வது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியனான ஜெர்மனி சர்வதேச தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. பிரேசில், போர்ச்சுகீசிய அணிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.