இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெட​ரர் காலிறுதிச்​சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...

Asianet News Tamil  
Published : Mar 16, 2018, 11:10 AM ISTUpdated : Sep 19, 2018, 02:04 AM IST
இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெட​ரர் காலிறுதிச்​சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...

சுருக்கம்

Indian Wells tennis Roger Federer of Switzerland progress to quarter-finals

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெட​ரர் காலிறுதிச்​சுற்றுக்கு முன்னேறினார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் உலகின் முதல் நிலையில் இருக்கும் ரோஜர் ஃபெட​ரர், தனது 4-வது சுற்றில் 7-5, 6-4 என்ற செட்களில் பிரான்ஸின் ஜெரிமி சார்டியை வீழ்த்தினார்.

வெற்​றிக்​குப் பிறகு பேசிய ஃபெட​ரர், "மூன்று ஆட்டங்களில் வென்றுள்ள நிலையில் திருப்தியாக உணர்கிறேன். ஏனெ​னில், இன்டியன் வெல்ஸ் போன்ற கடுமையான டிரா  இருக்கக் கூடிய போட்டியில் என்ன நடக்கும் என்பதை எதிர்​பார்க்க இயலாது" என்றார்.

ஃபெட​ரர் தனது காலிறுதியில் தென் கொரியாவின் சங்ஹியோனை எதிர்கொள்கிறார். 

முன்னதாக சங் ஹியோன் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 30-வது இடத்தில் இருந்த உருகுவேயின் பாப்லோ கியூ​வஸை 6-1, 6-3 என்ற செட்க​ளில் வீழ்த்தியிருந்தார்.

இந்த ஆண்​டில் ஃபெட​ரர் - ​ஹியோன் சந்​திப்பது இது 2-வது முறையாகும். முன்னதாக கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஃபெடரரும்  - ​ ஹியோனும் மோதி​னர்.அந்தப் போட்டியில் சிறப்பாக முன்னேறி வந்த ஹியோன், காலில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியிருந்​தார். இந்நிலையில், தற்போது மீண்டும் ஃபெடரரை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

v

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?