ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை

Published : Nov 19, 2022, 07:52 PM IST
ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை

சுருக்கம்

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.  

ஒரு காலத்தில் விளையாட்டை பொறுத்தமட்டில் இந்தியா கிரிக்கெட்டில் மட்டுமே வெற்றிகளையும் கோப்பைகளையும் பெற்று பிரபலமாக இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், தடகளம், பாக்ஸிங், பளுதூக்குதல் ஆகிய விளையாட்டு போட்டிகளிலும் சாதனைகளை படைத்துவருகிறது.

அந்தவகையில், ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவருகிறது. அரையிறுதியில் தோற்ற இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹினா ஹயாட்டா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மனிகா பத்ரா, 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற கணக்கில் 4 செட்களை வென்று 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன்மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் இந்தியாவிற்கு முதல் வெண்கல பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்தார் மனிகா பத்ரா.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தான் வீரரை வாங்கிய காவ்யா மாறன்.. விதிகளை மீறினாரா? மவுனம் கலைத்த பிசிசிஐ!
காதலியை கரம் பிடிக்கும் குல்தீப் யாதவ்.. வியக்க வைக்கும் மிஸ்டரி ஸ்பின்னரின் சொத்து மதிப்பு!